முகப்பு
விருதுநகர்

ஐ.பி.எம். சார்பில் கலசலிங்கம் பல்கலை.யில் வர்த்தக ஆய்வு ஆய்வகம்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பெங்களூரு, மைக்ரோசென்சிஸ் டெக்சாப்ட் நிறுவனம் சார்பில் வர்த்தக ஆய்வு ஆய்வகம் அமைக்கப்படவுள்ளது என நிறுவனத்தின் தலைமைப் பயிற்சி அதிகாரி எஸ்.ராகவன் கூறினார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:02 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பெங்களூரு, மைக்ரோசென்சிஸ் டெக்சாப்ட் நிறுவனம் சார்பில் வர்த்தக ஆய்வு ஆய்வகம் அமைக்கப்படவுள்ளது என நிறுவனத்தின் தலைமைப் பயிற்சி அதிகாரி எஸ்.ராகவன் கூறினார்.

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கணினித் துறை மாணவர் குழு தொடக்க விழா டைபாக்கோர் கட்டடத்தில் துணை வேந்தர் டாக்டர் எஸ்.சரவணசங்கர் தலைமையில் நடைபெற்றது. மாணவர் குழுத் தலைவர் சசிகுமார் வரவேற்றார்.

துறைத் தலைவர் டாக்டர் தேவராஜ், கடந்த ஆண்டின் குழு செயல்பாடுகள் குறித்தும், நடப்பு ஆண்டு திட்டங்கள் குறித்தும் விளக்கினார். அப்போது அவர் கூறுகையில், இந்த ஆண்டு மருத்துவ கம்ப்யூட்டிங், இணைய பாதுகாப்பு மற்றும் மொபைல் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி பட்டறை மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படும் என்றார்.

துணை வேந்தர் டாக்டர் சரவணசங்கர் பேசுகையில் கூறியதாவது: நெட்வொர்க் குறித்த சிறந்த வசதிகள் இந்தியாவில் அனைத்து நிறுவனங்கள் மத்தியில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் தான் உள்ளது. எனவே மாணவர்கள் நெட்வொர்க் பாதுகாப்பு பயிற்சி எடுத்து மேலும் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுத வேண்டும் என்றார்.

பெங்களூரு, ஐ.பி.எம். தலைமைப் பயிற்சி அதிகாரி நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துப் பேசுகையில் கூறியதாவது: ஐ.பி.எம். கல்வி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கூட்டு பட்டறை, கருத்தரங்கு மற்றும் ஆராய்ச்சி செயல்படுத்தவும், ஐ.பி.எம். வர்த்தக ஆய்வு ஆய்வகம் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும்.

இந்த ஆய்வகத்தைப் பயன்படுத்தி மாணவர்கள் பயிற்சி மற்றும் தொழில் துறை தேவைகளுக்குத் தயாராக வேண்டும் என்றார். மேலும் கிளிவுட்ஸ் கணினி மற்றும் இயக்கம் குறித்த ஒரு புராஜக்ட் சிறியதாகச் செய்து பின்னர் பெரியதாக்க வேண்டும் என்று பி.டெக். 2-ம் ஆண்டு மாணவர்களைக் கேட்டுக் கொண்டார். மாணவர்கள் அதிக நேரம் ஆய்வுக் கூடங்களிலேயே செலவு செய்ய வேண்டும். சர் சி.வி.ராமன் ஆய்வுக் கூடங்களிலேயே அவரது வாழ்க்கையில் 95 சதவீத நேரத்தைக் கழித்தார். பின்னர் ராமன் விஞ்ஞானியானார் என்றார் அவர்.

மாணவர் குழு துணைத் தலைவர் கிருஷ்ணா சர்மா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →