முகப்பு
விருதுநகர்

கும்பாபிஷேக ஆலோசனைக் கூட்டம்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருள்மிகு சென்னகேசவ பெருமாள் கோயிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் நாகையா,

Updated On : 7 டிசம்பர், 2014 at 12:26 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 1:06 PM

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருள்மிகு சென்னகேசவ பெருமாள் கோயிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் நாகையா, துணைத் தலைவர் மணிராஜ், கூட்டுறவு வங்கி தலைவர் பால்ச்சாமி, நகர செயலாளர் சொக்கையா தலைமையில் உபயதாரர்கள் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. பல கோடி நன்கொடையாக வசூல் செய்து கும்பாபிஷேகம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக பாலாயம் செய்யும் நிகழ்ச்சி 10-ந்தேதி நடத்துவதெனவும் முடிவு செய்யப்பட்டது.

திருக்கோவிலுக்கு சொந்தமாக உள்ள பல கடைகளின் உரிமையாளர்கள் பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் உள்ளனர். இவர்கள் உடனடியாக வாடகையை செலுத்த கோயில் செயல் அலுவலர் நாராயணி உத்தரவிட்டார். உபயதாரர்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.