விருதுநகர்

"அச்சம்பட்டியில் ரூ.30 லட்சம் செலவில் மேல்நிலைதொட்டி'

ரூ.30 லட்சம் செலவில் அச்சம்பட்டி மற்றும் மார்க்கெட் தெருவில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைதொட்டி அமைக்கப்பட்டு வருகிறது என்று காரியாபட்டி பேரூராட்சி மன்றத் தலைவர் காந்திமதி

கல்யாணி வெங்கடராமன்

ரூ.30 லட்சம் செலவில் அச்சம்பட்டி மற்றும் மார்க்கெட் தெருவில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைதொட்டி அமைக்கப்பட்டு வருகிறது என்று காரியாபட்டி பேரூராட்சி மன்றத் தலைவர் காந்திமதி தெரிவித்தார்.

  விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் காந்திமதி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பாரதாதேவி, செயல் அலுவலர் பூங்கொடி முருகு முன்னிலை வகித்தனர்.

  கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் காந்திமதி பேசியதாவது: ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் கே. செவல்பட்டி காளியம்மன் கோவில் வளாகத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் பேவர்பிளாக் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. பேரூராட்சி பொதுநிதியில் 6-வது வார்டில் ரூ.3.70 லட்சத்திலும், பள்ளி வாசல் வடக்கு தெருவில் ரூ.11.25 லட்சத்திலும், 12-வது வார்டு செம்பருத்தி தெருவில் ரூ.4.20 லட்சத்திலும், 15-வது வார்டு காலணி பெரியதெரு மற்றும் ஜெகஜீவன்ராம் தெருவில் ரூ.11.25 லட்சத்திலும் பேவர் பிளாக் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

  தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் மூலம் 6 மற்றும் 10-வது வார்டுகளில் ரூ.25 லட்சத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. குடிநீர் தேவைக்காக உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் நிதி திட்டத்தின்மூலம் ரூ.30 லட்சம் செலவில் அச்சம்பட்டி மற்றும் மார்க்கெட் தெருவில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைதொட்டி அமைக்கப்பட்டு வருகிறது.

  பேரூராட்சி பொதுநிதியில் இருந்து 1,2,7,8,9,11,12,14 மற்றும் 15 ஆகிய வார்டுகளில் சின்டெக்ஸ் தொட்டிகள் ரூ.10.35 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. கே.செவல்பட்டி மற்றும் கரிசல்குளம் ஊரணிகள் ரூ.11.95 லட்சம் செலவில் ஆழப்படுத்தப்பட்டுள்ளது.

  ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் காரியாபட்டி சின்னக்குளம் ஊரணியினை ஆழப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  நிர்வாக அனுமதி கிடைத்ததும் பணி தொடங்கும். காரியாபட்டி பேரூராட்சியில் அனைத்து வார்டுகளிலும் சாலை பழுதடைந்துள்ள தெருக்களில் பேவர் பிளாக் தளம் அமைக்க மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

  இதற்கான நிர்வாக அனுமதி கிடைத்த உடன் பணிகள் தொடங்கப்படும். காரியாபட்டி பேரூராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்த முதல் அமைச்சருக்கும், உள்ளாட்சிதுறை அமைச்சருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும், பேரூராட்சிகளின் இயக்குநர், உதவி இயக்குநர் ஆகியோருக்கும் பேரூராட்சி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT