பள்ளி மாணவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்
நரிக்குடி அருகே பள்ளி மாணவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது. நரிக்குடி அருகே அ.முக்குளத்தில், சுரபி அறக்கட்டளை சார்பில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா
நரிக்குடி அருகே பள்ளி மாணவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது.
நரிக்குடி அருகே அ.முக்குளத்தில், சுரபி அறக்கட்டளை சார்பில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளி மாணவியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் தொடங்கியது. அறக்கட்டளை நிறுவனர் விக்டர் தலைமை வகித்தார். அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் (கூடுதல்) பால்ராஜ் துவக்கி வைத்தார். முகாம் டிசம்பர் 15-வரை நடைபெறும். இதில் கலந்து கொள்ளும் மாணவிகளுக்கு புக் பைண்டிங், லேமினேசன், கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைன் பதிவு முறைகள், முதலுதவி பயிற்சி, இயற்கை உரம் தயாரித்தல், சமூக பாலின விழிப்புணர்வு, வாழ்வியல் திறன் குறித்து பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.