முகப்பு
விருதுநகர்

காவல்துறை துண்டு பிரசுரம் விநியோகம்

வாகனங்களில் போலியான நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தகூடாது என காவல்துறை சார்பில் திங்கள்கிழமை துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

Updated On : 10 பிப்ரவரி, 2015 at 12:31 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 10:11 AM

வாகனங்களில் போலியான நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தகூடாது என காவல்துறை சார்பில் திங்கள்கிழமை துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

மத்திய அரசு அறிவித்துள்ள உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகை (ஐ.என்.டி) இதுவரை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படவில்லை.

எனவே இத்தகைய நம்பர் பிளேட்டுகளை வாகனங்களில் பொருத்துவதும், தயாரித்து விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றம் என தெரிவித்து மல்லாங்கிணறு காவல்நிலையம் சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் சண்முகராஜன், ராதாபாண்டி, ராஜேந்திரன், காவலர் கார்மேகம் ஆகியோர் விநியோகித்தனர்.

Advertisement

அதில் போலிநம்பர் பிளேட்டுகளின் மாதிரி படங்களும் பிரசுரம் செய்யப்பட்டிருந்தது. அதுபோன்ற நம்பர் பிளேட் பொருத்தி வாகனங்களை ஓட்டி வந்தவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.