முகப்பு
விருதுநகர்

காரியாபட்டி பகுதியில்தக்காளி விலை கடும் வீழ்ச்சி

காரியபட்டி பகுதியில் தக்காளி கடுமையாக விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.காரியாபட்டி பகுதியில் கடந்த நவம்பர் முதல் வாரத்தில் மிளகாய் விதைகள் விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் ஊடுபயிராக தக்காளி செடிகளை விவசாயிகள் நடவு செய்தனர்

Updated On : 12 பிப்ரவரி, 2015 at 12:47 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 9:39 AM

காரியபட்டி பகுதியில் தக்காளி கடுமையாக விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

காரியாபட்டி பகுதியில் கடந்த நவம்பர் முதல் வாரத்தில் மிளகாய் விதைகள் விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் ஊடுபயிராக தக்காளி செடிகளை விவசாயிகள் நடவு செய்தனர்

. தற்போது அதில் பழுத்துள்ள தக்காளி பழங்களை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டில் விளைச்சல் குறைவாக இருந்ததால், தக்காளி கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையானது. இந்த ஆண்டு ஒவ்வொரு செடியிலும் குறைந்தபட்சம் 3 முதல் 6 கிலோ வரை தக்காளி பழங்கள் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. மேலும், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், மதுரை மார்க்கெட்டுகளில் இருந்தும் காரியாபட்டி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளுக்கு தக்காளி வரத்து அதிக அளவில் வருவதாலும், விலை வீழ்ச்சியடைந்து கிலோ 3 முதல் 5 ரூபாய் வரை விற்பனையாகின்றன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.