முகப்பு
விருதுநகர்

முருகையனார் கோயில் திருவிழா

திருச்சுழி அருகே உள்ள பழமைவாய்ந்த முருகையனார் கோயிலில் உற்சவம் நடந்தது. திருச்சுழி அருகே உள்ள வீரக்குடியில் 1800 ஆண்டுகள் பழமையான முருகையனார் கோயில் உள்ளது. இந்த

Updated On : 24 பிப்ரவரி, 2015 at 1:34 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 10:18 AM

திருச்சுழி அருகே உள்ள பழமைவாய்ந்த முருகையனார் கோயிலில் உற்சவம் நடந்தது.

திருச்சுழி அருகே உள்ள வீரக்குடியில் 1800 ஆண்டுகள் பழமையான முருகையனார் கோயில் உள்ளது. இந்த கோயிலின் உற்சவம் கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடனும், கணபதி ஹோமத்துடனும் துவங்கியது. தினமும் காலை, மாலை மற்றும் இரவு வேளைகளில் முருகையனாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்தன.

கோயிலில் இருந்து முருகையனார் ஞாயிற்றுக்கிழமை, பூச்சக்கர குடை, மகுடம், தோரணம் சூட்டி மேளதாளத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ முக்கிய வீதிகள் வழியாக நகர்வலம் வந்தார். விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். திங்கள்கிழமை அதிகாலை அர்த்தஜாம பூஜை நடந்தது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.