காரியாபட்டியிலிருந்து இருக்கன்குடிக்கு அரசு பேருந்துகளை இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக விவசாயிகள் சங்கத் தலைவர் விசுவாசம் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பது:
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. திருவிழா மற்றும் விசேஷ நாட்கள், வெள்ளி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் நேர்த்திக்கடன் செலுத்த காரியாபட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்குச் சென்று வருகின்றனர். அதேசமயம், இப்பகுதி பக்தர்கள் கோயிலுக்கு செல்ல விருதுநகர், அருப்புக்கோட்டை சென்று பல்வேறு பேருந்துகள் மாறிச் செல்ல வேண்டியிருக்கிறது. மதுரையிலிருந்து சில தனியார் பஸ்கள் குறிப்பிட்ட சில நேரத்திற்கு வந்தாலும் பல்வேறு ஊர்கள் சுற்றி செல்ல நேரிடுவதால் பணம், நேரம் விரையமாவதுடன், உரிய நேரத்திற்கு செல்ல முடியவில்லை.
பக்தர்கள் நலனை கருத்தில் கொண்டு காரியாபட்டியிலிருந்து வரலொட்டி, பாலவநத்தம், கோட்டூர் வழியாக இருக்கன்குடிக்கு புதிய பேருந்து வழித்தடம் ஏற்படுத்தினால் பணம், நேரம் விரயமாவதை தடுப்பதோடு, உரிய நேரத்தில் செல்ல வசதியாக கிடைக்கும்.
இப்பேருந்து மார்க்கத்தை நடைமுறைரப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.