விருதுநகர்

காரியாபட்டியில் சுகாதார விழிப்புணர்வு பேரணி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் தேசிய குடிநீர், சுகாதார விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் தேசிய குடிநீர், சுகாதார விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழு துணைத் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றியக் குழு தலைவர் முத்துலெட்சுமி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். குடிநீரை சேமிப்பது, பாதுகாக்கப்பட்ட குடிநீரை உபயோகிப்பது மற்றும் சுகாதார விழிப்புணர்வு பற்றிய வாசகங்கள் அடங்கிய அட்டைகளை பள்ளி மாணவர்கள் பேரணியில் ஏந்திச் சென்றனர். குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் மீனாட்சிசுந்தரம், உதவி பொறியாளர் மணிமாறன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பேரணியில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

SCROLL FOR NEXT