விருதுநகர்

சாத்தூர் பகுதியில் 4 நாள்கள்  உழவர் பாதுகாப்பு திட்ட முகாம் நாளை தொடக்கம்

DIN

சாத்தூர் பகுதியில் உழவர் பாதுகாப்பு திட்ட முகாம்கள் 4 நாள்கள் நடைபெற உள்ளன.
  இதுகுறித்து சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு விவரம்: 
   உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிய உறுப்பினர் சேர்த்தல் மற்றும் ஏற்கெனவே உறுப்பினர்களாக உள்ளவர்களிடமிருந்து உதவித்தொகை வழங்க மனுக்கள் பெறும் முகாம் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வரும் டிச.8 ஆம் தேதியும் (வெள்ளிகிழமை), சாத்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் வரும் 14 ஆம் தேதியும், படந்தால் கிராம நிர்வாக அலுவலர் அலுவகத்தில் 21 ஆம் தேதியும், இருக்கன்குடி சமுதாயக்கூடம் மற்றும் நள்ளி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் 27 ஆம் தேதியும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.  
  இந்த முகாம்களில் சாத்தூர் வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த கூலித்தொழிலாளர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

SCROLL FOR NEXT