விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உலக மண் வள தின விழா

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள என்.திருவேங்கடபுரம் கிராமத்தில் உலக மண்வள தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
  இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் கா.பாஸ்கரராஜ் மண்வளத்தின் பாதுகாப்பு, மண் பரிசோதனையின் முக்கியத்துவம் , மண்வள அட்டையில் குறிப்பிட்டபடி உரமிடுதல், மண்வளத்திற்கு ஏற்றவாறு பயிர்களை தேர்வு செய்தல், இயற்கை உரங்களைப் பயன்படுத்தி மண்வளத்தை மேம்படுத்துதல்  பற்றிய மண்வளம் தொடர்பான கருத்துக்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
      விழாவில் உலக மண்வள தினம் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் மற்றும் மண்வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.  விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் வேளாண்மை அலுவலர் ரா.சுமதி நன்றி கூறினார். ஏற்பாடுகளை அச்சந்தவிழ்த்தான் உதவி வேளாண்மை அலுவலர் பே.சரவணன் செய்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

SCROLL FOR NEXT