முகப்பு
விருதுநகர்

உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சைக்கு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
      இது குறித்து அவர் வியாழக்கிழமை மேலும் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் இருதய அறுவைச் சிகிச்சை, சிறுநீரக பாதை, தண்டுவடம், மூளை நரம்பியல், இடுப்பு எலும்பு மாற்று அறுவைச் சிகிச்சை மற்றும் புற்று நோய்களுக்கு சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.
     எனவே, மனுதாரர்கள் ஆட்சியருக்கு விண்ணப்பிக்கும்போது அசல் மனு இணைக்க வேண்டும். அரசு அங்கீகரித்த தனியார் மருத்துவமனையிலிருந்து நோயாளியின் முகவரி, அறுவைச் சிகிச்சைக்கான பெயர், மருத்துவரின் கையெழுத்து பெற்ற சான்றிதழை இணைக்க வேண்டும்.
    குடும்பத் தலைவரின் பெயரில் ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்குள் உள்ள வருமானச் சான்று இணைக்க வேண்டும். குடும்ப அட்டை, புகைப்படம் மற்றும் அனைத்து சான்றுகளும் ஓராண்டுக்குள் பெற்றதாக இருக்க வேண்டும். மேலும், வேறு எந்தத் திட்டத்திலும் மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி பெறப்படவில்லை என சான்றளிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →