மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடு!
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவாா்த்தை...
தமிழ்நாடுமாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடு!
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவாா்த்தை...
மாநிலங்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கப்பட்டது. திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவாா்த்தை கடந்த பிப். 22 முதல் நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் தேமுதிக உள்பட புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவாா்த்தை இழுபறியில் உள்ளது.
இந்நிலையில், இன்று (மார்ச் 3) தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) தரப்பிலிருந்து அக்கட்சியின் பொருளாளர் எல். கே. சுதீஷ் திராவிட முன்னேற்ற கழகத்தின் (திமுக) தலைவரும் தமிழக முதல்வருமான மு. க. ஸ்டாலினுடன் கலந்து பேசியதில் தொகுதிப் பங்கீட்டில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.