விருதுநகர்

டிராக்டர் மோதி முதியவர் சாவு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே டிராக்டர் மோதியதில் முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே டிராக்டர் மோதியதில் முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
மேட்டுமுள்ளிகுளத்தைச் சேர்ந்தவர் ப.முனியாண்டி (60). இவர் தனது இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை மல்லி - பாட்டக்குளம் சாலையில் சென்று கொண்டிருந்தார். தனியார் நூற்பாலை அருகே சென்றபோது எதிரே வந்த டிராக்டர் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த முனியாண்டி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மல்லி போலீஸார் டிராக்டர் ஓட்டுநர் முத்துக்கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த வீ. கோவிந்தராஜ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெகு விமர்சையாக நடைபெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேக விழா

சென்னை விமான நிலையத்தில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

SCROLL FOR NEXT