விருதுநகர்

விருதுநகர், சிவகாசியில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

DIN

தேசிய ஊரக வேலைத் திட்ட பணிநாள்களை 200 நாள்களாக அதிகரிக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு நகர் தலைவர் எல். முருகன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் தேனிவசந்தன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன் பேசினர். விவசாயிகள் தேசிய வங்கியில் வாங்கிய கடனை ரத்து செய்ய வேண்டும். 100 நாள் வேலையை 200 நாள்களாக அதிகரிக்க வேண்டும். தங்குதடையின்றி குடிநீர் வழங்க வேண்டும். அனைத்து ரேசன் கடைகளிலும் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். 60 வயது நிரம்பிய முதியோர்களுக்கு நிபந்தனையின்றி பென்ஷன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்  வலியுறுத்தப்பட்டது. இதில், ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
சிவகாசி:  இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகர செயலாளர் முருகன் தலைமை வகித்தார். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

களக்காடு உப்பாற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கழுகுமலை கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT