விருதுநகர்

முன்விரோதம்: கூலி தொழிலாளியை அரிவாளால் வெட்டியவர் கைது

DIN

திருத்தங்கலில் கூலி தொழிலாளியை அரிவாளால் வெட்டியவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
    திருத்தங்கல் ஆலாஊரணிப் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி தெய்வம் (40). இவர், சில நாள்களுக்கு முன் திருத்தங்கல்-செங்கமலநாச்சியார்புரம் சாலையில் தனது இரு மொபெட்டில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது,  குறுக்கே வந்த ஆடு ஒன்று அடிபட்டு கீழே விழுந்தது. 
      அப்போது, திருத்தங்கல் பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த முத்துராமன் (45) என்பவர், ஆட்டின் மீது மோதி காயப்படுத்தியதற்காக பணம் தரவேண்டும் என தகராறு செய்தாராம். ஆனால், தெய்வம் பணம் தர மறுத்துவிட்டாராம். 
     இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தால், திங்கள்கிழமை அதே பகுதியில் தனது மொபெட்டில் சென்று கொண்டிருந்த தெய்வத்தை வழிமறித்த முத்துராமன் அரிவாளால் வெட்டியுள்ளார். 
இதில் பலத்த காய
மடைந்த தெய்வம், 
சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
     இது குறித்த புகாரின்பேரில், திருத்தங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து முத்துராமனை கைது செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT