விருதுநகர்

சேதமடைந்துள்ள மின்கம்பங்களை சீரமைக்க கோரிக்கை

DIN

ஏழாயிரம் பண்ணை பகுதியில் பலத்த காற்றால்  சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   விருதுநகர் மாவட்டம் சாத்தூர், ஏழாயிரம்பண்ணை, தாயில்பட்டி, ரெட்டியாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை இரவு பலத்த சூறை காற்றுடன் மழை பெய்தது. இந்த பலத்த காற்றால் பழைய ஏழாயிரம் பண்ணை பகுதியில் சாலையில் மரம் சாய்ந்து விழுந்தது. 
மேலும் ஒரு சில பகுதிகளில் சாலையோரம் உள்ள  மின்கம்பங்களும் விழுந்து சேதமைடந்துள்ளன. இதனால் பழைய ஏழாயிரம் பண்ணை, மேட்டூர், முத்தாண்டியாபுரம், புதுபட்டி, அன்பின்நகரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தாகக் கூறப்படுறது. 
இதையடுத்து சாலையில் விழுந்த மரங்களை பொதுமக்கள் மற்றும் நெடுஞ்சாலைதுறையினர் அப்புறபடுத்தினார்கள். 
ஆனால் மின்வாரியத்துறையினர் மின்கம்பங்களை சரிசெய்யாமல் உள்ளனர். இதனால் பல்வேறு பகுதியில் மின்சாரம் தடைபட்டுள்ளது. எனவே உடைந்த மின்கம்பங்களை சரிசெய்து விரைவில் சீரான மின்சாரம் விநியோம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT