விருதுநகர்

வாகனம் மோதி இளைஞர் சாவு

DIN

ம.ரெட்டியபட்டி சாலையில் நடந்து சென்ற இளைஞர் மீது சனிக்கிழமை இரவு வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருச்சுழி வட்டம்  ம.ரெட்டியபட்டி அருகே உள்ள போத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பூசையா(30). இவருக்கு மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் பூசையா சனிக்கிழமை  காலை ம.ரெட்டியபட்டிக்குப் பேருந்தில் வந்துவிட்டு மீண்டும் தனது வீட்டுக்குச் செல்ல அன்று இரவு ரெட்டியபட்டி- கமுதி பிரதான சாலையில் நடந்து சென்றார்.
அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பூசையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு வந்த போலீஸார், அவரது சடலத்தை மீட்டு அருப்புக்கோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு பிணக்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
 இதுகுறித்து வழக்குப் பதிந்த ம.ரெட்டியபட்டி போலீஸார் விபத்தை ஏற்படுத்தித் தப்பிச் சென்ற வாகனத்தைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக சிறைகளில் 3 ஆண்டுகளில் 102 கைதிகள் உயிரிழப்பு!

காலமானாா் பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்

பிசானத்தூா்- புதுநகா் இணைப்புச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 12 பயணிகள் காயம்

க. பரமத்தியில் குடிநீா் திட்டப்பணிகள் ஆய்வு

SCROLL FOR NEXT