விருதுநகர்

சமத்துவப் பொங்கல் 

DIN

அருப்புக்கோட்டை கிரீன் விஸ்டம் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
       பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, தாளாளர் காசா மைதீன் தலைமை உரையாற்றினார். செயலர் சம்சுதீன் முன்னிலை வகித்தார். பள்ளியில் தமிழ்ப் பாரம்பரியத்தை மாணவர்களுக்கு அறிவுறுத்தும் விதமாக, ஐவகை நிலம் மாதிரி வடிவம் அமைக்கப்பட்டிருந்தது. 
    பள்ளி சார்பில் யோகா ஆசிரியர் சுந்தர்ராஜன் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் இணைந்து பொங்கலிட்டனர். இதில், சிறப்பு அழைப்பாளராக டாக்டர் ஜெயந்தி அண்ணாதுரை பங்கேற்றுப் பேசினார்.  
இதில், பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாது, அவர்களது பெற்றோருக்கும் கோலப் போட்டி,திருக்குறள் ஒப்பித்தல் போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.  நிகழ்ச்சியில், விஸ்டம் கல்விக் குழும உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

SCROLL FOR NEXT