விருதுநகர்

விருதுநகரில் பொங்கல் பொருள்கள் வாங்க அலைமோதிய பொதுமக்கள்

DIN

விருதுநகரில் சனிக்கிழமை பொங்கல் பொருள்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழர் திருநாளான தை பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, விருதுநகரில் சனிக்கிழமை கிராம மக்கள் உள்பட ஏராளமானோர் பொங்கல் கொண்டாடுவதற்குத் தேவையான பலசரக்கு உள்ளிட்ட பொருள்கள் வாங்குவதற்காக குவிந்தனர்.
இதன் காரணமாக, தேசபந்து மைதானம், பஜார், மதுரை சாலை, பழைய பேருந்து நிலையப் பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதனால், போக்குவரத்து போலீஸார் மற்றும் காவல்நிலைய போலீஸார் என 50-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.மேலும், பொங்கல் பொருள்கள் வாங்க வந்த பொதுமக்கள் கரும்பு, மஞ்சள்செடி, பூக்கள் உள்ளிட்ட பொருள்களின் விலை உயர்வால் அதிருப்தி அடைந்தனர்.
பஜார் பகுதி இருவழி பாதையாக்கப்பட்டதால், கூட்டம் காரணமாக பொதுமக்கள் இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பிற வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT