அருப்புக்கோட்டையில் மின்கம்பிகளை ஒட்டிச் செல்லும் மரக்கிளைகளை அகற்றக் கோரிக்கை
அருப்புக்கோட்டை நகரில் பல இடங்களில் மின்கம்பிகளை ஒட்டிச் செல்லும் மரக்கிளைகளை உடனடியாக அப்புறப்படுத்த சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை நகரில் பல இடங்களில் மின்கம்பிகளை ஒட்டிச் செல்லும் மரக்கிளைகளை உடனடியாக அப்புறப்படுத்த சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை நகரிலுள்ள திருச்சுழி சாலை, மரக்கடை பஜார் ஆகிய பகுதிகளில் உள்ள பிரதானச் சாலைகள் மீது பழமையான பெரிய வேப்பமரங்களும், புளியமரங்களும் உள்ளன. நிழல்தரும் இம்மரங்களின் கிளைகள் அவற்றினருகே செல்லும் உயரழுத்த மின்கம்பிகளை உரசும் விதமாக வளர்ந்து விடுகின்றன. குறிப்பாக அருப்புக்கோட்டை சார் - பதிவாளர் அலுவலக வளாகம் முன் உள்ள பெரிய மரங்களின் கிளைகள் அவற்றினருகே உள்ள உயரழுத்த மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) மீது உரசி நிற்கின்றன. எனவே அந்த மரக்கிளைகளை மின்சார வாரியத்தினர் வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.