முகப்பு
விருதுநகர்

ராஜபாளையத்தில் கம்பன் கழக அறக்கட்டளை கூட்டம்

ராஜபாளையத்தில் கம்பன் கழக அறக்கட்டளைக் கூட்டம் தலைவர் பி.ஆர். விஜயராகவராஜா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. 

Updated On : 9 ஜூலை, 2018 at 6:53 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

ராஜபாளையத்தில் கம்பன் கழக அறக்கட்டளைக் கூட்டம் தலைவர் பி.ஆர். விஜயராகவராஜா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. 
முன்னதாக கழக அறங்காவலர்  என்.எஸ்.முத்துகிருஷ்ண ராஜா வரவேற்றுப் பேசினார். கழகத்தின் 2017 - 18 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுக் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்ட விவரங்களையும், ஆண்டறிக்கையையும் கழகச் செயலாளர் பீ.உமாசங்கர் வாசித்தார். வரும் 2018 - 19 ஆண்டு கணக்குகளையும் தணிக்கையாளர் ஆர்.சுரேஷ்குமார் கொண்டு தணிக்கை செய்யத் திட்டமிடப்பட்டது.
கழகத்தின் 38 ஆவது ஆண்டு விழாவுக்கு நன்கொடை வழங்கியவர்களுக்கும், விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழறிஞர்களுக்கும், போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. 
கூட்டத்தில் கே.கோபால்சாமி, சுகந்தம் என்.எஸ். ராமகிருஷ்ண ராஜா ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர். கழகச் செயலர் ரெ.ராஜ்குமார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.