முகப்பு
விருதுநகர்

நியாய விலை கடையில் பொருள்கள் வழங்க மறுப்பு: கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

நியாய விலை கடையில் அத்தியாவசிய பொருள்கள் வழங்க அக்கடை விற்பனையாளர் மறுப்பதாக தவசிலிங்கபுரம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் மனு அளித்தனர்.

Updated On : 15 மே, 2018 at 12:33 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

நியாய விலை கடையில் அத்தியாவசிய பொருள்கள் வழங்க அக்கடை விற்பனையாளர் மறுப்பதாக தவசிலிங்கபுரம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் மனு அளித்தனர்.
இது குறித்து அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, விருதுநகர் அருகே உள்ள மருதநத்தம் கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில் மூளிப்பட்டி, தவசிலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்கி வந்தனர். தவசிலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த 150 குடும்ப அட்டைதாரர்களுக்கு வாரந்தோறும் திங்கள் கிழமை மட்டும் பொருள்கள் வழங்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து, பட்டாசு ஆலை தொழிலாளர்களான நாங்கள் திங்கள்கிழமை அன்று வேலைக்கு செல்லாமல் நியாய விலை கடைக்கு சென்றால், அன்றைய தினம் கடை பூட்டியிருக்கும். இதனால், அடுத்த வாரம் தான் மீண்டும் செல்ல முடியும். அப்போது சென்றாலும், எந்த பொருள்களும் இல்லை என எங்களை விற்பனையாளர் திருப்பி அனுப்பி விடுவார். மேலும், எங்கள் கிராமத்திலிருந்து மருதநத்தத்திற்கு பேருந்து வசதி இல்லாததால், 2 கி.மீ., நடந்தே நியாய விலை கடைக்கு சென்று வருகிறோம். ஆனால், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வாங்க முடியவில்லை. எனவே, தவசிலிங்காபுரத்தில் புதிதாக நியாய விலை கடை திறக்க வேண்டும், இல்லையெனில், மருதநத்தம் கிராமத்தில் திங்கள்கிழமை தோறும் எங்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.