முகப்பு
விருதுநகர்

கம்பன் கழக சொற்பொழிவுக் கூட்டம்

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் ஸ்ரீமீனாட்சி சமேத ஸ்ரீசொக்கநாதர் ஆலய வளாகத்தில் கம்பன் கழகத்தின்

Updated On : 21 மே, 2018 at 11:56 PM
பகிர்:

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் ஸ்ரீமீனாட்சி சமேத ஸ்ரீசொக்கநாதர் ஆலய வளாகத்தில் கம்பன் கழகத்தின் 341ஆவது சொற்பொழிவுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சத்தியசாயி சேவா சமித்திக் குழுவினரின் சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சொற்பொழிவுக் கூட்டத்தை கம்பன் கழகப் புரவலரும், தொழிலதிபருமான டி.ஆர்.தினகரன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். கம்பன் கழக துணைச் செயலர் கு.செல்வம் வரவேற்றார். சிறப்புச் சொற்பொழிவாளராகக் கலந்து கொண்ட மதுரையைச் சேர்ந்த சண்முகதிருக்குமரன், ராமாயணத்தில் வரங்களும் பலன்களும் எனும் தலைப்பில்ஆன்மிக சொற்பொழிவாற்றினார். இவருக்கு, தொழிலதிபர் டி.ஆர்.தினகரன் நினைவுப்பரிசு வழங்கினார். இணைச் செயலர் கண.கணேசன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு துணைச் செயலர்கள் பி.கோடீஸ்வரன், வே.நாகராஜ், எஸ்.பால்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.