விருதுநகர்

சிவகாசியில் சேர்மன் சண்முகம் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

DIN

சிவகாசியில் பழுதாகியுள்ள சேர்மன் சண்முகம் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையின் ஒரு பகுதியான இந்த சாலையில் ஒரு புறம் மட்டுமே மழைநீர் செல்லும் வாய்கால் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மிதமான மழை பெய்தாலும் இச்சாலையில் தண்ணீர் தேங்கு கிறது. எனவே சாலையும் பழுதாகிறது. இது மாநில நெடுஞ்சாலை என்பதால் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் சில சமயம் சாலையை சீரமைக்கும் போது, வெறும் மண்ணைப்போட்டு குழியை மேவி விடுகிறார்கள். இதனால் மழைபெய்தால் மீண்டும் சாலை குண்டும் குழியுமாகிவிடுகிறது. இச்சாலையில் மழைநீர் செல்ல வாய்கால் இல்லாத பகுதியில், சாலையின் நடுவே வாய்கால் அமைத்து, வாய்கால் அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு தண்ணீரை கொண்டு செல்ல வழிவகை செய்ய வேண்டும். இந்த சாலையை வழியாகவே சிவகாசியில் உள்ள இரு பெரிய பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்ல வேண்டும். சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், இருசக்கர வாகனத்தில் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து வரும் பெற்றோர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மழை பெய்தால் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்குகிறது.
இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வேர் பள்ளத்தில் விழுந்து விடுகிறார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி இச்சாலையில் வாய்கால் அமைத்து குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT