விருதுநகர்

உலக பசுமையாக்கலை வலியுறுத்தி பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி

DIN

விருதுநகரில் உலக பசுமையாக்கலை வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
 விருதுநகர் அருகே பெரியவள்ளிக்குளத்தில் உள்ள நோபிள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப் போட்டியில், உலக பசுமையாக்கலை கருப்பொருளாக கொண்டு மாணவ, மாணவிகள் ஓவியம் தீட்ட அறிவுறுத்தப்பட்டது.  அதன் அடிப்படையில், மரங்கள், மழைநீர் சேகரிப்பு, தடுப்பணை கட்டுதல் முதலான ஓவியங்களை ஏராளமான மாணவ, மாணவிகள் சுவர்களில் வரைந்தனர். இதில், பிளஸ் 2 மாணவி அபிநயா முதலிடத்தையும், 10 ஆம் வகுப்பு மாணவிகள் ஹர்ஷினி பிரியா, சுஜ்ஜேஷ்னி ஆகியோர் 2 ஆம் இடத்தையும், பிளஸ் 1 மாணவி அனிதா மற்றும் 6 ஆம் வகுப்பு மாணவி யாக்ஷினி 3 ஆம் இடத்தையும் பெற்றனர். 
இவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக இந்நிகழ்ச்சியை, இப்பள்ளியின் தலைவர் ஜெரால்டு ஞானரத்தினம், பள்ளியின் செயலர் வெர்ஜின் இனிகோ ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT