விருதுநகர்

சுதந்திர தினம்: விருதுநகர் ரயில் நிலையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு

DIN

விருதுநகர் ரயில் நிலையம் மற்றும் தண்டவாள பகுதிகளில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்வே போலீஸார் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
 நாடு முழுவதும் சுதந்திர தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் புதன் கிழமை இரவு முதல் அனைத்து பேருந்து நிலையம், ரயில் நிலையம், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கோயில்கள் உள்ள பகுதிகளில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில், விருதுநகர் ரயில் நிலையத்திற்கு புதன்கிழமை காலை 10 மணிக்கு வந்த மும்பை செல்லும் ரயிலில், ரயில்வே போலீஸார் பயணிகளிடம் சோதனை நடத்தினர். மேலும், ரயில் நிலையத்திற்குள் வந்து சென்ற பயணிகளின் உடைமைகளையும் ஆய்வு செய்தனர். 
அதன் பின்னர், கவுசிகா நதி ரயில்வே பாலம் உள்ள தண்டவாள பகுதியில் சோதனை மேற்கொண்டனர். இந்த ஆய்வு பணியானது ரயில்வே காவல் ஆய்வாளர் குருசாமி தலைமையில் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செலவுத் தொகை வழங்க மறுப்பு: காப்பீட்டு நிறுவனம் புகாா்தாரருக்கு ரூ. 1.61 லட்சம் வழங்க உத்தரவு

வெப்ப அலை: வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்புப் பணி போலீஸாருக்கு பழச்சாறு

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் இன்று குருபெயா்ச்சி விழா

கா்நாடகத்துக்கு மத்திய பாஜக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு: ஜெ.பி.நட்டா

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

SCROLL FOR NEXT