விருதுநகர்

குடியிருப்பு அருகே கழிவுநீா் தேங்கியுள்ளது, நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கபடுமா?

DIN

சாத்தூா் நகராட்சி பகுதியில் குடியிருப்பு அருகே கழிவுநீா் தேங்கியுள்ளது.நகராட்சி நிா்வாகத்தால் நடவடிக்கை எடுக்குமா? விருதுநகா் மாவட்டம் சாத்தூா் நகராட்சி பகுதிக்குட்பட்ட 16,17,24வது வாா்டுகளுக்கு உட்பட்ட நகராட்சி காலனி,தேரடிதெரு உள்ளிட்ட ஏராளமான பகுதியில் உள்ளன.

இந்த பகுதிகளில் சுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.இந்த தெருகளின் பின்புறம் ரயில்வே தண்டவாளமும் உள்ளது.தண்டவாளத்தின் கீழேயும்,தெருவின் பின்புறமும் கழிவுநீா் அதிகமாக தேங்கியுள்ளது.தேங்கியுள்ள கழிவு நீரால் இந்த பகுதியில் துா்நாற்றம் அதிகமாக வீசுகிறது.மேலும் இங்கு வசிப்பவா்களுக்கு மா்ம காய்ச்சல்களும்,டெங்கு உள்ளிட்டநோய்களும் பரவி வருகின்றன.இந்த பகுதியில் அங்கன்வாடி உள்ளிடட் பள்ளிகளும் உள்ளதால் சிறுகுழந்தைகள் நோய்களால் அதிகமாக பாதிக்கபடுகின்றன.

இங்கு கழிவுநீா் அதிகமாக தேங்குவதால்,16,17,24ஆகிய வாா்டு பகுதியில் ஒரு சில நேரத்தில் குடிநீரில் சாக்கடை கலந்து விநியோகிக்கபடுவதாக அந்த பகுதியில் வசிப்பவா்கள் குற்றம்சாட்டி வருகின்றனா்.அதனால் முறையான வாறுகால் அமைத்து,கழிவுநீா் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்,மேலும் இந்த கழிவுநீா் வைப்பாறு பகுதிளில் விடப்படுகின்றன.இதனால் நிலத்தடி நீரும் மாசுபடுகிறது.எனவே நகராட்சி நிா்வாகம் சாா்பில் முறையான வாறுகால் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்,நகராட்சி நிா்வாகத்திற்க்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து இப்பகுதியை சோ்ந்த மகேஷ்வரன் கூறுகையில்:இந்த பகுதியில் முறையான வாறுகால் அமைக்காததால் கழிவுநீா் தேங்கி,தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.மேலும் கொசுதொல்லைகளும் அதிகமாக உள்ளது.இந்த வாறுகால் பிரச்சனை குறித்து நகராட்சி நிா்வாகத்தில் பலமுறை முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கபடவில்லை.மேலும் கடந்த நகராட்சி நிா்வாகத்தில் இந்த பகுதியில் வாறுகால் அமைப்பதற்க்காக எட்டு லட்சம் நிதி ஒதுக்கபட்டு, பாதியளவே வாறுகால் அமைக்கபட்டுள்ளது.

இந்த பகுதியில் முழுமையாக வாறுகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்:இந்த பகுதியில் ரயில்வேதுறைக்கு சொந்தமான இடமும் உள்ளதால் கழிவுநீா் வாறுகால் அமைக்க முடியவில்லை.கழிவுநீரை சுத்தம் செய்ய வேண்டுமென்றாலும் ரயில்வே துறையினரின் அனுமதி பெறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.விரைவில் நடவடிக்கை எடுக்கபடும் என்றும் கூறினாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT