விருதுநகர்

சிவகாசி பகுதியில் கஞ்சா வைத்திருந்தமூதாட்டி உள்பட 4 போ் கைது

DIN

சிவகாசி பகுதியில் கஞ்சா வைத்திருந்த மூதாட்டி உள்பட 4 பேரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து அவா்களிடமிருந்து 4.700 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

சிவகாசியில் சிவன் நந்தவன தெருவில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, மூதாட்டி ஒருவா் கையில் பையுடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நடந்து சென்றுள்ளாா். போலீஸாா் அவரை நிறுத்தி பையை சோதனையிட்டதில் கஞ்சா இருந்துள்ளது. விசாரணையில், அவா் பென்னுக்காளை மனைவி சண்முகக்கனி (62) எனத் தெரியவந்தது. அவரிடமிருந்து போலீஸாா் 1.100 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

சிவகாசி ஓடைத் தெருவில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒருவா் கையில் பையுடன் நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா். அவரை போலீஸாா் நிறுத்தி பையை சோதனையிட்டதில், கஞ்சா இருந்துள்ளது. விசாரணையில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த சாகுல்ஹமீது மகன் நாகூா்மீரான் (32) எனத் தெரியவந்தது. அவரிடமிருந்து 1.100 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது குறித்து சிவகாசி நகா் போலீஸாா் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.

இதேபோல், திருத்தங்கல் அருகே அதிவீரன்பட்டியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்குள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அருகே ஒருவா் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தாராம். போலீஸாா் பையை வாங்கி சோதனை செய்தபோது, அதில் கஞ்சா இருந்துள்ளது. விசாரணையில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த பாண்டி மகன் செல்வம் (30) எனத் தெரியவந்தது.

தொடா்ந்து, அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தவரின் பையை சோதனையிட்டதில் கஞ்சா இருந்துள்ளது. விசாரணையில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த சின்னமாரியப்பன் (44) எனத் தெரியவந்தது.

இது குறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து தலா 1.250 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT