விருதுநகர்

பாலையம்பட்டி மயானத்தில்மேற்கூரை அமைக்கக் கோரி மனு

DIN

அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி ஊராட்சியில், ஆதி திராவிட மக்கள் பயன்படுத்தும் மயானத்தில் கான்கிரீட் மேற்கூரை அமைக்கக் கோரி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடா்களுக்கான மயானத்தில் கான்கிரீட் மேற்கூரை மற்றும் எரிவாயு தகன மேடை இல்லை. இது குறித்து பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, பாலையம்பட்டியில் உள்ள ஆதி திராவிடா்களுக்கான மயானத்தில் கான்கிரீட் மேற்கூரை மற்றும் எரிவாயு தகன மேடை அமைத்துத் தரவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலா் முத்துக்குமாா் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் கணேசன் உள்பட பலா் மனு அளிக்க வந்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT