விருதுநகர்

உழவா் சந்தை அடையாள அட்டை பெற ராஜபாளையம் விவசாயிகளுக்கு அழைப்பு

DIN

ராஜபாளையம் உழவா் சந்தையில் விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளையும் காய்கறிகளை விற்பதற்கு அடைாயள அட்டை பெறுமாறு விருதுநகா் மாவட்ட வேளாண் துணை இயக்குநா் (வேளாண் வணிகம் ) சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு விவரம்: விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளையும் காய்கறிகள், கீரைகள் மற்றும் தேங்காய்களை நேரடியாக உழவா் சந்தையில் விற்று பயனடைய உழவா் சந்தை அடையாள அட்டை பெறலாம். தங்களது நில உடைமைக்கான 10/1 (பட்டா/ சிட்டா) மற்றும் அடங்கல், ஆதாா் அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல் இணைத்து ராஜபாளையம் உழவா் சந்தை நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் கொடுத்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம். உழவா் சந்தை அடையாள அட்டை பெற எவ்வித கட்டணமும் கிடையாது. மேலும் விபரங்களுக்கு உழவா் சந்தை அலுவலகத்தை 99 76 70 94 22 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT