விருதுநகர்

எரிச்சநத்தம் பகுதியில் கல்குவாரி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

DIN

விருதுநகர் அருகே எரிச்சநத்தம் கிராமப் பகுதியில் கல்குவாரி அமைப்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்பதால் அப்பகுதியில் கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: எரிச்சநத்தம் அருகே செவலூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் பிரதான தொழிலாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. 
எரிச்சநத்தம் கிராமம் அருகே புதிதாக கல்குவாரி தொடங்க ஒரு தனியார் நிறுவனம் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறிந்தோம். 
இக்குவாரி அமைய உள்ள இடம் அருகே பள்ளிகள் மற்றும் கோயில் ஆகியவை உள்ளன. 
மேலும், இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. எனவே, இங்கு கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கினால், விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்படும். 
அதேபோல், பள்ளி மாணவ, மாணவிகளும் சிரமத்திற்கு உள்ளாவார்கள். எனவே, புதிய கல்வாரிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக் கூடாது என அதில் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT