விருதுநகர்

அருப்புக்கோட்டையில் மின்கம்பிகளை உரசும்மரக்கிளைகளால் விபத்து அபாயம்

DIN

அருப்புக்கோட்டை ராமசாமிபுரம் நகரில் சாலையோர மரங்களின் கிளைகள் உயரழுத்த மின்கம்பிகளை உரசுவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு மரக்கிளைகளை அகற்றியோ அல்லது மின்கம்பிகளை மாற்று வழியில் அமைத்தோ விபத்தைத் தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 அருப்புக்கோட்டை நகரின் 32 ஆவது வார்டுக்குள்பட்டது ராமசாமிபுரம். அருப்புக்கோட்டையிலிருந்து பந்தல்குடி செல்லும் பிரதானச் சாலை இந்நகர் வழியாகச் செல்கிறது. இப்பிரதானச் சாலையின் இரு ஓரங்களிலும் நிழல்தரும் புளியமரங்கள் அதிகம் உள்ளன. இந்நிலையில் இச்சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களுக்கிடையிலான உயரழுத்த மின்கம்பிகள் அங்குள்ள மரங்களின் கிளைகள் மீது உரசி செல்கின்றன. இதனால் அதிக காற்று அல்லது மழை காரணமாக இந்த மின்கம்பிகள் அறுந்து சாலை மீது விழும் அபாயச் சூழல் நிலவுகிறது. எனவே மின்கம்பிகளை மாற்றுப் பாதையில் கொண்டு சென்றோ அல்லது மரக்கிளைகளை அகற்றியோ உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT