விருதுநகர்

தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டுக்கள் வைத்திருந்தவர் கைது

DIN

திருத்தங்கலில் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டுக்கள் வைத்திருந்ததாக ஒருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
திருத்தங்கல் கடைவீதிப் பகுதியில் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டுக்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடை உள்ளிட்டவைகளில் சோதனை நடத்தினர். இதில் கடை வீதியில் நின்று கொண்டிருந்தவரின் பையை சோதனையிட்ட போது, அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் இருந்ததாம். விசாரணையில் அவர் திருத்தங்கல்- செங்கமலநாட்சியாபுரம் சாலைப் பகுதியைச் சேர்ந்த கருப்பையா (71) எனத் தெரியவந்தது.
 இதுகுறித்து திருத்தங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கருப்பையாவை கைது செய்து அவரிடமிருந்த 61 லாட்டரி சீட்டுக்கள் மற்றும் லாட்டரி சீட்டுக்கள் விற்ற பணம் ரூ.7,620  ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT