விருதுநகர்

செவித்திறனற்றோர் பள்ளி  நூறு சதவீதம் தேர்ச்சி

DIN

மானாமதுரையில் உள்ள சிஎஸ்ஐ செவித்திறனற்றோர் பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் அனைவரும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றதையடுத்து, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் அவர்களைப் பாராட்டினார்.
இப்பள்ளியில் பயின்ற 14 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு  அரசு பொதுத்தேர்வினை எழுதினர். திங்கள்கிழமை வெளியிடப்பட்ட தேர்வு முடிவில், 14 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதையொட்டி, அப்பள்ளியின் தாளாளர் சாமிதாஸ், தலைமையாசிரியை மெர்சி ஜெயசீலி மற்றும் தேர்வில் தேர்ச்சி பெற்ற 14 மாணவ, மாணவிகள் அனைவரும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனை செவ்வாய்க்கிழமை சந்தித்தனர். அப்போது ஆட்சியர் அனைவரையும் வாழ்த்தி, பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT