விருதுநகர்

சிவகாசியில் மிதமான மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

DIN

சிவகாசியில் புதன்கிழமை மாலை மிதமான மழை பெய்ததையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 சிவகாசி பகுதியில் கடந்த சில நாள்களாக நிலவி வந்த கடும் வெப்பநிலையால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில் சிவகாசி பகுதியில் புதன்கிழமை மாலை 5.10 மணி முதல் 6 மணி வரை மிதமான மழை பெய்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளான சிவகாசி - திருத்தங்கல் சாலை, சிவகாசி-வெம்பக்கோட்டை சாலை, சிவகாசி-விளாம்பட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்தோடியது. 
மேலும் என்.ஆர்.கே.ஆர்.வீதி, சிவன் சன்னதி உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால்களில் தேங்கிய குப்பைகள் முறையாக அள்ளப்படாததால் கழிவு நீர், மழைநீருடன் கலந்து சாலையில் ஓடியது. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT