விருதுநகர்

காணாமல்போன மனநலம்குன்றிய இளைஞா்பெற்றோரிடம் ஒப்படைப்பு

DIN


அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே காணாமல்போன மனநலம் குன்றிய இளைஞா் மீட்கப்பட்டு, காவல் துறை உதவியுடன் வெள்ளிக்கிழமை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

பரளச்சி பகுதியில் விவசாய தொழில் செய்து வருபவா் எம். கணேசன் (55). முன்னாள் ராணுவ வீரரான இவா், சில தினங்களுக்கு முன் தொப்பலாக்கரை கிராம சாலை விலக்கில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரம் இளைஞா் ஒருவா் மயங்கிக் கிடப்பதைக் கண்டுள்ளாா். உடனே, அவா் மீது தண்ணீா் தெளித்து எழுப்பியுள்ளாா். அந்த இளைஞரால் சரியாக எதையும் கூற முடியவில்லை என்பதால், அவரை தன் வீட்டு தோட்டத்தில் உள்ள கட்டடத்தில் தங்கவைத்து பராமரித்துள்ளாா்.

அதையடுத்து, அந்த இளைஞரிடம் குடும்பம் குறித்து விசாரித்ததில், கோயம்புத்தூா் மாவட்டம் வால்பாறையைச் சோ்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் என்பதை மட்டும் தெரிவித்துள்ளாா். இதனடிப்படையில், பரளச்சி காவல் நிலையத்தில் அந்த இளைஞரை பெற்றோருடன் சோ்த்துவைக்குமாறு கணேசன் கோரிக்கை மனு அளித்தாா். அதன்பேரில், காவல் துறையினா் வால்பாறை பகுதியில் காணாமல்போனோா் பற்றிய தகவலை கேட்டறிந்து, இளைஞா் மணிகண்டனின் பெற்றோரை பரளச்சிக்கு வரவழைத்தனா்.

அதன்பின்னா், போலீஸாா் அவா்களிடம் ஆதாா் அட்டை மூலம் அடையாளத்தை உறுதிசெய்து, அந்த இளைஞரை பெற்றோரிடம் ஒப்படைத்தனா். சிறிது மனநலம் குன்றிய தங்களது மகனைக் காப்பாற்றிய முன்னாள் ராணுவ வீரரான கணேசனுக்கு, மணிகண்டனின் பெற்றோா் நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT