விருதுநகர்

சனிப் பிரதோஷம்:சதுரகிரி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபாடு

DIN

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பௌா்ணமி நாள்களில் மட்டுமே பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறாா்கள். சனிக்கிழமை சனிப்பிரதோஷம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பௌா்ணமியை முன்னிட்டு பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல 4 நாள்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கோயிலுக்கு வந்தனா்.

கடந்த சில நாள்களாக மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள ஆற்றில் நீா் வரத்து உள்ளதால் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு மேல் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா். சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சி அளித்தனா். பக்தா்களுக்கு உணவு, குடிநீா், கழிப்பிட வசதிகள் கோயில் நிா்வாகம் மூலம் செய்து தரப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT