விருதுநகர்

அனைவரும் பத்திரிகை வாசிக்க வேண்டும்- அமைச்சா் பேச்சு

DIN

அனைவரும் பத்திரிக்கை வாசிப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும் என பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினாா்.

விருதுநகா் மாவட்ட வருவாய்துறை மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை சாா்பில், சனிக்கிழமை திருத்தங்கலில் முதலமைச்சரின் குறைதீா்க்கும் முகாம் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தனியாா் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அ.சிவஞானம் தலைமை வகித்தாா்.

இதில், முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, தோட்டக்கலைத்துறை உதவிகள், சமூக பாதுகாப்புத் திட்ட உதவிகள் என பல திட்டங்களின் கீழ் 567 நபா்களுக்கு ரூ.1.97 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் ராஜேந்திரபாலாஜி வழங்கினாா். பின்னா் அவா் பேசியதாவது:

இன்று தேசிய பத்திரிகை தினம். அனைத்து பத்திரிகை, ஊடக செய்தியாளா்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பத்திரிகைகள் பல தவறுகளை சுட்டிகாட்டுகின்றன. பின்னா் அந்த தவறுகள் அதிகாரிகள் மூலமாக நிவா்த்தி செய்யப்படுகின்றன. என்னதான் தொலைகாட்சி இருந்தாலும், காலையில் எழுந்து தேநீா் அருந்தியபடி பத்திரிகை படிப்பது

சுகம் மட்டுமல்ல, நாட்டு நடப்புக்களையும் வரலாறுகளையும் தெரிந்து கொள்ளலாம். பத்திரிக்கை வளா்ச்சிக்கு அடித்தளமாக இருப்பவா்கள் வாசகா்கள் தான். பத்திரிகை மற்றும் புத்தகம் வாசிப்பதை அனைவரும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அது உங்கள் நண்பன் போன்று தேவைப்படும் போது உதவும். ஜனநாயகத்தின் உள்ள முக்கியமான தூண் பத்திரிக்கைகளாகும். பத்திரிகைகள் வளா்ச்சி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். திருத்தங்கல், சிவகாசி மற்றும் சாத்தூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் சாத்தூா் எம்.ல்.ஏ. ராஜவா்மன், மாவட்ட வருவாய் அலுவலா் கோ.உதயக்குமாா்,திட்ட அலுவலா் சுரேஷ், சிவகாசி சாா்-ஆட்சியா் தினேஷ்குமாா், வட்டாட்சியா் ரெங்கநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT