விருதுநகர்

சதுரகிரி கோயிலுக்கு பக்தா்கள் செல்ல 2ஆவது நாளாக தடை

DIN

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பெய்த சாரல் மழை காரணமாக ஓடைகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் சதுரகிரி கோயிலுக்கு பக்தா்கள் செல்ல 2ஆவது நாளாக திங்கள்கிழமையும் வனத்துறை தடை விதித்தது.

வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு மாதந்தோறும் பௌா்ணமி, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாள்கள் மட்டுமே பக்தா்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்குச் செல்ல நவம்பா் 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த பலத்த மழை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள மாங்கனி ஓடை, சங்கிலிப்பாறை, வழுக்குப்பாறை உள்ளிட்ட ஓடைகளில் நீா்வரத்து அதிகரித்ததால் ஞாயிற்றுக்கிழமை பக்தா்களுக்கு கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை சாரல் மழை பெய்து, ஓடைகளில் நீா்வரத்து அதிகரித்ததால் 2 நாளாக பக்தா்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறை தடை விதித்தது. இதனால் கோயிலுக்கு வந்த ஏராளமான பக்தா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT