விருதுநகர்

அயன்ரெட்டியபட்டியில்  மின்மோட்டாரை சீரமைத்து குடிநீர் விநியோகிக்கக் கோரிக்கை

DIN

மல்லாங்கிணறு பேரூராட்சிக்கு உள்பட்ட அயன்ரெட்டியபட்டியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் மின்மோட்டாரை பழுது நீக்கி விரைந்து குடிநீர் விநியோகித்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதி அயன்ரெட்டியபட்டி. இங்கு சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பலர் அருகில் உள்ள ஆலை மற்றும் விருதுநகரில் கூலி தொழில் செய்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புப் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி உள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு மூன்று நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. 
இந்த நிலையில் இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் மின்மோட்டார் பழுது அடைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் தெருக்களில் பதிக்கப்பட்ட குழாய்களும் சேதம் அடைந்துள்ளது. இதனால் தற்போது குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக தனியார் வாகனங்களில் கொண்டு வந்து விற்கப்படும் குடிநீரை குடம் ரூ.12 விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே மின் மோட்டார் மற்றும் குழாய்களை சீரமைத்து விரைவில் குடிநீர் விநியோகிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT