விருதுநகர்

ராஜபாளையத்தில் குழாய் உடைந்து குடிநீர் வீண்

DIN

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மலையடிப்பட்டியில் கடந்த சில வாரங்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது.
ராஜபாளையத்தில் மலையடிப்பட்டி செளந்திரபாண்டியன் நகரில் பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றது. அப்போது குடிநீர் குழாய் உடைந்துள்ளது. இந்த உடைப்பை சரி செய்யாமல் சாக்கடைக்கான குழியை மட்டும் மூடினார்கள். குடிநீர் குழாயில் ஏற்பட்ட 
உடைப்பின் காரணமாக சில வாரங்களாக குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. தற்போது அப்பகுதியில் குடிநீர் குளம்போல் தேங்கி உள்ளது. நீர் வெளியே செல்ல வழி இல்லாததால் மக்கள் அந்த நீரையே எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். 
தற்போது நிலவிவரும் வறட்சியின் காரணமாக 10 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் இவ்வாறு தண்ணீர் வீணாவது மக்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக குடிநீர் குழாயை சரி செய்து குடிநீரை வீணாக்காமல் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT