விருதுநகர்

"திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அமைச்சருக்கு ஆர்வம் இல்லை'

DIN

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலம் அமைக்க அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி ஆர்வம் காட்டவில்லை என விருதுநகர் தொகுதி மக்களவை உறுப்பினர் மாணிக்கம்தாகூர் கூறினார்.
திருத்தங்கல் மற்றும் சிவகாசி ரயில் நிலையங்களில் செவ்வாய்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  திருத்தங்கல் ரயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை வசதி செய்யவும், சென்னை - கொல்லம் விரைவு ரயில் திருத்தங்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும். சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே அங்கு விரைவில் மேம்பாலம் அமைக்கப்படும். திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலம் அமைக்க தமிழக அரசு மூன்று முறை வழித் தடத்தை மாற்றிவிட்டது. இந்த தொகுதி அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ஆர்வம் இல்லாததால் தான் இத்திட்டம் தாமதமாகி வருகிறது என நான் நினைக்கிறேன். ஏனென்றால் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அமைச்சர் வேறுவழித்தடத்தில் பாலம் அமைக்க முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது என்றார்.
ஆய்வின்போது, காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்

ருதுராஜ், தேஷ்பாண்டே அசத்தல்: வெற்றியுடன் மீண்டது சென்னை

விருதுநகா் சந்தை: உளுந்து, துவரம் பருப்பு விலை உயா்வு

நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: பாஜகவினா் மீது புகாா்

வாக்கு எண்ணிக்கை மையம் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

SCROLL FOR NEXT