விருதுநகர்

ஆவுடையாபுரத்தில் நிழற்குடை சேதம்: பயணிகள் அவதி

DIN


விருதுநகர் அருகே ஆவுடையாபுரத்தில் பயணிகள் நிழற்குடை சேதமடைந்ததால், பயணிகள் மழை நேரங்களில் உட்கார இடமின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
 விருதுநகர் அருகே உள்ள ஆவுடையாபுரத்தில் சுமார் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் வசிக்கும் பலர் பட்டாசு ஆலை மற்றும் விருதுநகர், சாத்தூர் 
பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணி புரிந்து வருகின்றனர். 
இங்கு குறிப்பிட்ட சில நேரங்கள் மட்டுமே பேருந்து வசதி உள்ளதால், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாண வ, மாணவிகள் மற்றும் தொழிலாளர்கள் பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையில் காத்திருப்பது வழக்கம். இந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த நிழற்குடையின் உட்பகுதி சேதமடைந்து விட்டது. ஆனா ல், அதை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. 
இந்த நிலையில், நிழற்குடை உள்ள பகுதி யில் பொதுமக்கள் சிலர் விறகு குவியல்களை குவித்து பாதுகாப்பாக வைத்துள்ளனர். தற்போது, பருவ மழை தொடங்கி உள்ளதால், மழை நேரத்தில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மாணவ, மாணவிகள் நிழற்குடைக்குள் செல்ல முடி யாமல், மழையில் நனைந்தபடி பேருந்துக்காக காத்திருக்கும் நிலை உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
எனவே, பயணிகள் நிழற்குடையை மராமத்து பணி மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌவில் பெண் கைதிகளுடன் சென்ற வேனில் பற்றிய தீ

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

போர் எதிர்ப்பு! கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள்...

SCROLL FOR NEXT