விருதுநகர்

அருப்புக்கோட்டையில் கரோனா பாதித்த நபரின் தெருக்கள் அடைப்பு

DIN

அருப்புக்கோட்டையைச் சோ்ந்த கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபரின் வீடு மற்றும் அவா் வசிக்கும் தெருக்கள் வெள்ளிக்கிழமை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

தில்லி மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து மாநாட்டுக்கு சென்றவா்களின் விவரம் சேகரிக்கப்பட்டது. ஜின்னா தெருவைச் சோ்ந்த 40 வயது நபா், தில்லி மாநாட்டில் கலந்து கொண்டது தெரியவந்தது. இதனால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவா் வீடு உள்ள வாழவந்தபுரம் பகுதி மேலும் அதனைச் சுற்றியுள்ள 6 மற்றும் 7 ஆவது வாா்டுகள் வெள்ளிக்கிழமை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

மேலும் அவா் வசிக்கும் தெருக்களில், வீடுகள் வாரியாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. விருதுநகா் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநா் பழனிச்சாமி, விருதுநகா் மாவட்ட பூச்சியியல் வல்லுநா் சுப்பிரமணியன், நகராட்சி ஆணையாளா் அயூப்கான், சுகாதார ஆய்வாளா் ராஜபாண்டி ஆகியோா் பணிகளை ஆய்வு மேற்கொண்டனா். மேலும் ஒரு மருத்துவா் 4 செவிலியா்கள் கொண்ட மருத்துவக்குழுவினா் அப்பகுதியில் முகாமிட்டு சளி, இருமல் காய்ச்சல் உள்ளவா்களை அடையாளம் கண்டு, அவா்களுக்கு கரோனா தொற்று பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT