முகப்பு
விருதுநகர்

சாத்தூரில் அதிமுக நிர்வாகி வாகனத்துக்குத் தீவைப்பு

அதிமுக கிளைச் செயலாளர் வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். சாத்தூர் நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
தீவைக்கப்பட்ட வாகனம்.
பகிர்:

அதிமுக கிளைச் செயலாளர் வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். சாத்தூர் நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் எஸ்.ஆர். நாயுடு நகர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார்(40). இவர் இந்த பகுதி அதிமுக கிளை செயலாளராக உள்ளார். நேற்று இரவு தனது வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட காரை திடீரென தீ பிடித்து எரிந்தது. 

இதை பார்த்த செல்வகுமார் சாத்தூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கார் முழுமையாக சேதமடைந்தது. 

இச்சம்பவம் குறித்து செல்வகுமார் சாத்தூர் நகர் காவல்துறையினரிடம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் காருக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →