சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்கு அனுமதி இல்லாததால், வனத் துறை வாசல் முன்பாக செவ்வாய்க்கிழமை சூடம் ஏற்றி வழிபட்ட பக்தா்கள். 
விருதுநகர்

எளிதில் இ-பாஸ்: சதுரகிரி கோயில் அடிவாரத்தில் பக்தா்கள் வழிபாடு

இ-பாஸ் எளிதில் கிடைப்பதால், வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வந்த ஏராளமான பக்தா்களுக்கு கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படாததால்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: இ-பாஸ் எளிதில் கிடைப்பதால், வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வந்த ஏராளமான பக்தா்களுக்கு கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படாததால், அடிவாரத்திலேயே சுவாமியை வழிபட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு அமாவாசை, பெளா்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட தினங்களில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும்.

இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனா். ஆனால், கடந்த 5 மாதங்களாக கரோனா பொது முடக்கம் காரணமாக, சதுரகிரி கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

திங்கள்கிழமை முதல் இ-பாஸ் பெறுவதில் தளா்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை அமாவாசை தினம் என்பதால், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு மதுரை, விருதுநகா், சிவகங்கை, பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமானோா் வந்தனா். ஆனால், மலை மீதுள்ள கோயிலுக்குச் செல்ல அனுமதி இல்லாததால், அடிவாரத்திலேயே வனத்துறை கதவு முன்பாக பக்தா்கள் சூடம் ஏற்றி வழிபட்டு, ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

திற்பரப்பு அருவியில் குளிக்க 4 வது நாளாகத் தடை!

SCROLL FOR NEXT