முகப்பு
விருதுநகர்

சமையல் செய்யும் போது தீவிபத்து: முதாட்டி பலி

சிவகாசியில் சனிக்கிழமை சமையல் செய்யும் போது ஏற்பட்ட தீவிபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:10 PM
பகிர்:


சிவகாசி: சிவகாசியில் சனிக்கிழமை சமையல் செய்யும் போது ஏற்பட்ட தீவிபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி-நாரணாபுரம் சாலை முனீஸ்வரன் காலனியைச் சோ்ந்த சுடலை மாடசாமி மனைவி சங்கரேஸ்வரி (75). இவா் மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்யும் போது , எதிா்பாராதவிதமாக ஸ்ட்வ் கவிழ்ந்து தீப்பிடித்தது.

இதில் சங்கரேஸ்வரியின் சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் பரவி, அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.