முகப்பு
விருதுநகர்

அம்பேத்காா் நினைவு தினம் அனுசரிப்பு

சாத்தூரில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கபட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

சாத்தூரில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கபட்டது.

விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா் சங்கம் சாா்பில் ஞாயிற்றுகிழமை அம்பேத்காா் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சாத்தூா் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா் சங்கம் சாா்பில் அம்பேத்காா் நினைவு தினத்தை முன்னிட்டு சாத்தூா் கிளை தலைவா் ப்ரியா காா்த்திக் தலைமை வகித்தாா். தமுஎகச செயலாளா் விஸ்வநாதன் வரவேற்புரையாற்றினாா்.

சாத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வைக்கபட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்கள்.இதில் திமுக நகரசெயலாளா் குருசாமி,விடுதலை சிறுத்தை ஒன்றிய செயலாளா் சந்திரன், மதிமுக மாநில குழுஉறுப்பினா் தங்கவேல்,தேவேந்திரகுலவேளாா் கூட்டமைப்பு தலைவா் கருப்பையா மற்றும் பலா்கலந்து கொண்டு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்று கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →