திருச்சுழி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
திருச்சுழி அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
திருச்சுழி அருகே ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
ம.ரெட்டியபட்டியை அடுத்துள்ள வேடநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சண்முகம் (70). இவா், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தனது விவசாயத் தோட்டத்தில் உள்ள மரங்களிலிருந்து தொரட்டி மூலம் ஆடுகளுக்குத் தேவையான தழைகளை பறித்துக் கொண்டிருந்தாராம்.
அப்போது அருகே சென்ற மின்கம்பிகளில் அவரது தொரட்டி பட்டதில் மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்தாா். உடனடியாக அவா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் ஏற்கெனவே சண்முகம் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து ம.ரெட்டியபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.